மன்னார் மறைமாவட்ட இன்றைய ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய ஆயர் தெரிவு திருத்தந்தையால் வெளியிடப்பட்டுள்ளது சிறந்த மன்னார் மைந்தன் தெரிவாகியமைக்கு மன்னார் மறைமாவட்ட மக்கள் இன்ப வெள்ளத்தில்
அருட்தந்தை ஞானப்பிரகாசம்
அந்தோனிப்பிள்ளை அடிகளார் மன்னார் மறைமாவட்டத்தின் 4வது ஆயராக திருத்தந்தை 1ம் பிரான்சிஸ் ஆண்டகையால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என சனிக்கிழமை (14) வெளியிடப்பட்டுள்ளது
. இவர் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றியவர்களில் முதல் ஆயராக அபிசேகம் செய்யப்படஉள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
திருத்தந்தையின் இந்நியமன செய்தி மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கென ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களினால் உத்தியோகபூர்வமாக சனிக்கிழமை (14.12) மாலை 4.15 மணியளவில் வாசிக்கப்பட்டது.
இதன்போது மன்னார் மறைவாட்டத்திலுள்ள ஆலயங்களின் மணிகள் ஒலிக்கப்பட்டு இறைமக்களுக்கும் இச்செய்தி அறிவிக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்டம் ஆரம்பிக்கப்பட்டு 43 வருடங்கள் கடந்து செல்லும் இந்நிலையில் கடந்த காலங்களில் இம் மன்னார் மறை மாவட்டத்திற்கு மூன்று ஆயர்கள் வெளி மறைமாவட்ட களில் இருந்தே நியமனம் பெற்றிருந்தனர்
இவ்வாறான நிலையிலேயே புதிய ஆயராக நியமனம்பெற்ற அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை அடிகளார் அவர்கள் மன்னார் மறைமாவட்ட குருக்களிலிருந்து நியமனம்பெற்ற முதலாவது ஆயராவார்
மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயராக நியமனம் பெற்றுள்ள மேதகு ஞானப்பிரகாசம் அடிகளார் அவர்கள் மன்னார் அடம்பன் இத்திக்கண்டல் கிராமத்தில் 12.07.1965 ல் பிறந்தார்
தனது குருத்துவ உருவாக்கத்தை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திலும் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியிலும் முழுமையாக பெற்றுக்கொண்டார்
இவர் மன்னார் மறைமாவட்டத்திற்கு ஒரு குருவாக 07.04.1994 ம் ஆண்டு அபிஷேகம் செய்யப்பட்டார்
இதைத் தொடர்ந்து இவர் முருங்கன் பங்கில் 1994 லிருந்து 1996 வரையும்.
1996 லிருந்து 1999 வரை மன்னார் மறைமாவட்ட ஆயரின் செயலாளராகவும்
பின் இவர் 1999 லிருந்து 2003 வரைசெட்டிக்குளம் பங்குத் தந்தையாகவும்
2003 லிருந்து 2006 வரை பள்ளிமுனை பங்குத் தந்தையாகவும்
2006 லிருந்து 2009 வரை வங்காலை பங்கு தந்தையாகவும்
2014 லிருந்து 2018 வரை மன்னார் மறைமாவட்ட சிறிய குருமட இயக்குனராகவும்
2018 லிருந்து 2021 வரை மன்னார் மறைமாவட்ட பேராலயத்தின் பரிபாலகராகவும்
2021 லிருந்து 2023 வரை பேசாலை பங்கு தந்தையாகவும்
2023 லிருந்து இன்று வரை அருட்தந்தை அவர்கள் மடு ஆலய பரிபாலகராக கடமையாற்றியுள்ளார்
இவர் அமெரிக்கா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் 2010 லிருந்து 2014 வரை உயர் கல்வியையும்
2022 ஆம் ஆண்டு இந்தியாவில் இளைஞர் தொடர்பான ஒரு முக்கிய கருத்தமர்வில் கலந்து கொண்டுள்ளார்
அத்துடன் இவர் 2017 லிருந்து டிசம்பரில் இருந்து 2023 ஓகஸ்ட் வரை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவராக இருந்து மன்னார் மாவட்ட மக்களுக்காக பலவிதமான பொதுப் பணிகளில் மிகவும் கடுமையாக உழைத்து வந்தார்
மன்னார் தீவில் மக்களுக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மின் காற்றாலை அமைத்தல் கனியவள மணல் அகழ்வுக்கு எதிராக மக்களோடு மக்களாக இருந்து குரல் கொடுத்து இவற்றை விரிவுபடுத்த விடாது தடுத்த ஒரு முக்கியமான நபராக திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இவர் என்றும் இன்முகத்துடன் மக்களோடு நன்கு பழகுபவர் ஆனால் நீதிக்கு மாறாக் யார் ஈடுபட்டாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் பண்புகள் கொண்டவர் இவர்
( வாஸ் கூஞ்ஞ) 15.12.2024