பொத்துவில் பிரதேசத்துக்கு முஸ்லிம் திணைக்களம் மற்றும் இலங்கை வக்ப் சபை இணைந்து ரூபாய் 10 லட்சம் வழங்கி வைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொத்துவில் பிரதேசத்துக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை வக்ப் சபை இணைந்து முஸ்லிம் தர்ம நிதியில் (MCF) இருந்து (12) வியாழக்கிழமை 10 லட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.