அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ஊடக செயலமர்வு

கண்டி தெநுவர வலயத்திற்குட்பட்ட தெகியங்க அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) ஊடகப்பிரிவு மாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான இலவச ஊடக செயலமர்வு அண்மையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

ஆர்.ஜே.மீடியா
வலையமைப்பின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாத்திமா சப்னாவின் ஏற்பாட்டில், கல்லூரியின் அதிபர் எம்.மன்சூர் மபாஹிர் அனுமதியுடன் பிரதி அதிபர் உஸ்மான் லெப்பை மொஹமட் ரிஸான் அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஊடகத்துறையின் அவசியம் மற்றும் எமது இலக்கை வெற்றிகரமாக மாற்றுவது எப்படி போன்ற தலைப்புகளை உள்ளடக்கி செயல்முறையுடன் கூடிய விரிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இவ் அமர்வின் விரிவுரைகளை ஆர்.ஜே.மீடியா வலையமைப்பின் பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ.எம்.இன்சாப் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.