(இரா.துவாரகா)
சட்டத்தரணி பிரேமநாத் சி. டோலவத்த
வாக்குகளைப் பெறும் நோக்கில் போலிப் பட்டங்களை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக சிவில் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சட்டத்தரணி பிரேமநாத் சி. டோலவத்த கூறுகிறார்.
தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி தொடர்பான சம்பவங்களின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் தமக்கு இல்லாத தகுதிகளை காட்டுவதற்காக பொய்யான தகவல்களை முன்வைத்துள்ளதாக இதுவரை தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலைமை அவர்களுக்கு தார்மீக பிரச்சினை எனவும் சட்டத்தரணி டொலவத்த தெரிவித்தார்.
தேசிய மக்கள் படையின் எட்டு உறுப்பினர்கள் தொடர்பில் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், இந்தப் பிரச்சினை தனிநபர்களின் பிரச்சினையல்ல, கட்சி சார்ந்த தார்மீகப் பிரச்சினை எனவும் டொலவத்த தெரிவித்தார்.
எனவே இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மக்களுக்கு உண்மை நிலவரத்தை விளக்கினால் தேசிய மக்கள் சக்திக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.