மாவட்ட இலக்கிய போட்டியில் சிறுகதை ஆக்கத்தில் கற்பிட்டி டில்ஷா முதலாம் இடம்

கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய மாவட்ட இலக்கியப் போட்டித் தொடரில் சிறுகதை ஆக்க போட்டியில் “கோடை மழை” எனும் தலைப்பில் சிறுகதையை எழுதிய கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி எம்.ஜே.பாத்திமா டில்ஷா அதி சிரேஷ்ட பிரிவில் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டார்.

மேலும் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கற்பிட்டி பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய பிரதேச இலக்கியப் போட்டித் தொடரிலும் சிறுகதை ஆக்க போட்டியில் முதலாம் இடத்தினையும் கல்வியின் சிறப்பு எனும் கவிதை போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ள இவர் கற்பிட்டியைச் சேர்ந்த யூ.எம் ஜனாப் மற்றும் எம்.டீ.சரீபா ஆகியோரின் மூத்த புதல்வியாவார்.