கராத்தே போட்டியில் மன்னார் மாவட்ட மட்டத்தில் ஐந்து வீரர்கள் சாம்பினாகத் தெரிவு

அண்மையில் (08.12) கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மன்னார் மாவட்ட கராத்தே நிகழ்வில் பங்குபற்றிய ஐந்து மாணவர்கள் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட வீரர்களுக்கான நடைபெற்ற இப்போட்டியில் மன்னார் மாவட்டத்தைச் சார்ந்த ஐஎஸ்எஸ்கேஏ கழகத்தின் சார்பாக பங்குபற்றிய மாணவர்களே இப்போட்டியில் மாவட்ட போட்டியில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றியீட்டிய சாம்பியன்களாக ஏ.இவோன் ஸ்ரேயா (விடத்தல்தீவு தூய.யோசவாஸ் மகா வித்தியாலயம்) . ஜே.ஜெசின் (கற்கடந்தகுளம் சென் யோசவ் விளையாட்டு கழகம்) . என்.நிதுன்னா (கற்கடந்தகுளம் சென் யோசவ் விளையாட்டு கழகம்) .. பி.ரஜீவன் (வங்காலை சென்.ஆன்ஸ் பாடசாலை) எஸ்.முகேஸ் (மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி) இவர்களே மன்னார் மாவட்ட மட்டத்திலான கராத்தே சம்பியனாக தெரிவு செய்யப்பட்டவராவர்

இக்கராத்தே பயிற்றுவிப்பாளராக சென்சை அ.அமல்ராஜ் ஐஎஸ்எஸ்கே மன்னார் மாவட்ட தலைமை ஆசிரியர் ஆவார்.

இப்போட்டியில் மன்னார் மாவட்டத்திலிருந்து இரண்டு கழகங்கள் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)