மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எஸ்க்கோ நிறுவனத்தினால் 150 உலர் உணவு போதிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனிடம் எஸ்கோ நிறுவன பணிப்பாளர் ஸ்பிரித்தியோன் அவர்களினால் இன்று (11) கையளிக்கப்பட்டது.

மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச பிரிவுகளிலும் , கோறளைப்பற்று வடக்கு வாகரை மற்றும் மண்முனை மேற்கு பிரதேச பிரிவில் உள்ள நரிப்புல் தோட்டம் மக்களுக்கும் உலர் உணவுப் போதிகள் எஸ்கோ நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

எஸ்கோ நிறுவனமானது கடந்த காலங்களில் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தல், பாதுகாப்பான புலம்பெயர்தலை உறுதிப்படுத்தல், பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள முன்பள்ளி சிறார்களுக்கான கல்வி வழங்கள்,மாதர்கிராம அபிவிருத்தி சங்கங்களை வலுவூட்டும் போன்ற செயற் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.