சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வு கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் (RDPO) நிறுவனத்தின் பணிப்பாளர் வ.றமேஸ் ஆனந்தன் தலைமையில் பாலையடிதோணா பிரதேசத்தில் இன்று (10) இடம்பெற்றது .

கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் திட்டத்தின் இணைப்பாளர் சி.உபதாரணி ஏற்பாட்டில் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் மரநடுகை நிகழ்வு நடைபெற்றது.

RDPO நிறுவனத்தினால் மனித உரிமை பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனை வழிகாட்டுதல்கள் வழங்கி வருகின்றனர்.

இதன் போது மாவட்டத்தில் இயங்கிவரும் மனித உரிமைகளுக்கான முதலுதவி மையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் பற்றியும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் திட்டத்தின் இணைப்பாளரினால் தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வின் வளவாளராக வ.லோகிதராஜா மற்றும் மனித உரிமை முதலுதவி மையத்தின் பாதுகாவலர்களான போ. மேகலநாதன் சி.கமலேஸ்வரராசா உ.விதுசன் , சி.தக்சனா மற்றும் கிராம ஒத்துழைப்பு மன்றம் (VSF) (சந்திவெளி, பாலையடிதோணா) மாதர் கிராம அபிவிருத்திசங்கம் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.