கற்பிட்டியில் வர்த்தகர்களால் ஆக்கிரிமித்துள்ள நடை பாதைகளை விடுவிக்குமாறு அறிவித்தல்

கற்பிட்டி நகர் புறங்களில் உள்ள வீதியின் இரு மருங்கிலும் மக்கள் நடைபாதை பகுதியில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அத்தோடு கடை உரிமையாளர்களினால் வைக்கப்பட்டுள்ள வியாபாரப் பொருட்கள் மற்றும் விளம்பர பதாகைகள் என்பவற்றை அகற்றுமாறு கற்பிட்டி பிரதேச சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொது மக்களின் நடைபாதைகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள சகல பொருட்களையும் எதிர்வரும் 13 ம் திகதிக்குள் அப்புறப்படுத்துமாறு கற்பிட்டி பிரதேச சபையினால் பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது .

இதனை மீறி செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக 13 ம் தகதிக்கு பின்னர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கற்பிட்டி பிரதேச சபையின் பகிரங்க அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.