கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக நல்லையா வில்வரத்தினம் நியமனம்

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக நல்லையா வில்வரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தினை இன்று(11) புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுனர் .ஜெயந்தலால் ரத்னசேகர திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுனர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

இவர் இலங்கை நிர்வாகசேவை முதலாம் தர விசேட வகுப்பினைச் சேர்ந்தவராவார். வவுணதீவு, வெல்லாவெளி, செங்கலடி ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் பின்னர் காணி ஆணையாளராக கடமையாற்றிய நிலையிலேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள முனைக்காடு கிராமத்தில் பிறந்த இவர், கிழக்குப்பல்கலைக்கழகத்தில் பட்டத்தினைநிறைவு செய்து, இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து இலங்கை நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டார். மேலும் பொருளாதார அபிவிருத்தியில் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி பட்டத்தினையும் பெற்றுள்ளார்.