மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செலயக பிரிவில் சமுர்த்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட ஜயவிமன ரன்விமன வீடுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் கையளிக்கப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வறியவர்களுக்கான உலர் உணவு போதிகள், சிபதொர புலமைப் பரிசில் கொடுப்பனவுகள், வீட்டுத் தோட்ட பயிர் கன்றுகள் என்பன அதிதிகளினால் வழங்கி வைத்தப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு, உதவி பிரதேச செயலக எம்.ஏ.சி.ரமீசா, தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம். பசீர், முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், வங்கி முகாமையாளர் எஸ்.ரவி, கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.சரீப் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்