வெள்ளத்தினால் பாதிக்கப்பட மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது சுகாதார சேவைகள் பணிமனை பிரதேசத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணனின் ஆலோசனைக்கு அமைவாக, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஜெகசோதி மதன் ன வழிகாட்டல் நடைபெற்றது .

விங்ஸ் ஒப் ஹியுமினிடி கண்டி நிறுவன பணிப்பாளர் திருமதி. ரசிதா நவ்சாத் தின் அனுசரனையுடன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் போது சுமார் 200 பயனாளர்கள் பயனடைந்தனர்.