தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கற்பிட்டி செடோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பிட்டியில் இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்ட உயர்தர மாணவர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் முகமாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கற்பிட்டி செடோ ஸ்ரீலங்கா காரியாலயத்தில் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர். முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் அதிதிகளாக அகில இலங்கை சமாதான நீதவானும் , கற்பிட்டி சமாதான சபையின் உறுப்பினருமான ஏ.எச்.எம்.எம் சாபி, கற்பிட்டி சுற்றாடல் குழுவின் இணைப்பாளர் எச்.எம் சுகைப், போறூட் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் எம் மகீன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எம் மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டு தமது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களையும் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.