புதிய வானம் மற்றும் கிரீண் சேனல் அமைப்பும் இணைந்து இலங்கையில் நடாத்திய சர்வதேச விருது விழா 2024.

இலங்கை இந்தியா மற்றும் கனடா ஐரோப்பா நாட்டிலும் இந்திய பல்வேறு துறைகளில் சாதனையாளர்களுக்கு புதிய வானம் மற்றும் கிறீண் சேனல் இணைந்து வழங்கும் விழா மாதவன் தனலட்சுமி மற்றும் மனி ஸ்ரீ காந்த் ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் மிக விமர்சையாக நடைபெற்றது‌

இதன் போது இலங்கையை சேர்ந்த இலங்கை நெய்னார் சமூக நல காப்பக தலைவர் இம்ரான் நெய்னாருக்கு ‘சிறந்த சமூக சேவையாளர் ‘ விருது வழங்கி வைக்கப்பட்டதோடு
மூத்த ஊடகவியலாளர் தினகரன் செந்தூரம் வார மஞ்சரி ஆசிரியர் ஈஸ்வர லிங்கம் . பல்துறை ஆளுமை அலைகலை வட்ட ஸ்தாபக தலைவர் ராதா மேத்தா. கவிதாயினி ஊதாப்பூ சிமாரா அலி
என்பவர்களோடு மேலும் பல ஆளுமைளுக்கு விருது வழங்கி கௌரவிக்கபட்டதோடு இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்திருந்த பல ஆளுமைகளுக்கும் விருது மற்றும் கௌரவம் வழங்கி வைக்கபட்டனர்.

இதன்போது இம்ரான் நெய்னார் அவர்களுக்கு கர்நாடக தமிழ் சங்கம் மற்றும் வீரப்பாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை என்பவற்றின் மூலம் அவரது சமூக சேவைகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கபட்டார்