மட்டக்களப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிதிப்பிரமான இயலலவை மேம்படுத்துவதற்கான செயலமர்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (06) இடம் பெற்றது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிதிப்பிரமானம் தொடர்பான தெளிவூட்டல்கள் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வினைத்திறனான சேவையை பெற்றுக் கொள்வதை கருத்திற்கொண்டு நிதிப்பிரமானம் தொடர்பான விளக்கங்கள் இதன் போது வழங்கப்ட்டது.
மேலும் உத்தியோகத்தர்கள் நிதிப்பிரமான செயற்பாடுகளின் போது எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இச் செயலமர்வில் பொது சம்பளம் தொடர்பான தெளிவூட்டல்களை பிரதம உள்ளக கணக்காய்வாளர் எஸ்.ஏ சசிகரன் மற்றும் பொது நிதிப்பிரமானம் எனும் தலைப்பிலான தெளிவூட்டல்களை கணக்காளர் திருமதி கே.சித்ரா ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு