பருத்தித்திறை பொலீஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் காணப்படுகிறது.
தனது தாயரைநேற்று பிற்பகலிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்றவேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடி பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்துள்ள நிலையில் அக்கிணற்றை அவரது மகன் எட்டிப்பார்த்த வேளை கம்பி வலையால் மூடிய கிணற்றிற்குள் சடலம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக காணப்படுபவர் மூன்று பிள்ளைகளின் தாயான
விமலன் சிந்து என்கின்ற 42 வயதுடைய இளந்தாயார் ஆவர் இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.