வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடை ஒன்றில் நூதன முறையில் இன்று கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஐயாயிரம் ரூபா நாணயத்தாளை காண்பித்து பால்மா பெட்டி ஒன்றை வாங்கியுள்ளனர்
பால்மா பெட்டியையும் மிகுதி பணத்தையும் கடைக்காரரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அவர்கள் தாம் வைத்திருந்த ஐயாயிரம் ரூபா நாணயத்தாளையும் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளனர்
இவர்கள் இருவரும் மருதங்கேணி பிரதேசத்தில் வேறு கடைகளிலும் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது
மருதங்கேணி பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிலும் மோசடி செய்ய முற்பட்டு அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை கண்டதும் அங்கிருந்து விலகிச் சென்ற சம்பவமும் இடம்பெற்றுள்ளது
கடை உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சிசிடிவி காணொளியின் அடிப்படையில் மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்