நாவிதன்வெளி பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலருணவு,

அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி நளீர் பௌண்டஷனின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரும், நளீர் பௌண்டஷன் நிறுவுனருமான எம்.ஏ. நளீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும், அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரும், நளீர் பௌண்டஷன் நிறுவுனருமான எம்.ஏ. நளீர் அவர்கள் அஸீஸா பவுண்டேஷன் பணிப்பாளர் சாதீக் ஹசனிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அந்த அமைப்பு தலா 7500 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகளை மாணவர்களுக்கு வழங்கியது.

இந்நிகழ்வில் அஸீஸா பவுண்டேஷன் பணிப்பாளர் அஷ்ஷேஹ் சாதீக் ஹசன், நளீர் பௌண்டஷன் நிறுவுனர் எம்.ஏ. நளீர் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.