வவுனியா பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் கழகத்தின் தலைவராக புத்தளம் ஷவ்வாப் தெரிவு

வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார முகாமைத்துவ பீடத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறையில் சிறப்பு பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் புத்தளம் எம்.ஆர்.எம்.ஷவ்வாப் வவுனியா பல்கலைக்கழகத்தின்
வியாபார கற்கைகள் பீடத்தின்
சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறையின் சந்தைப்படுத்தல் கழக தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

புத்தளம் எம்.ஆர்.எம்.ஷவ்வாப், ஆசிரியர் ஏ.சீ.எம்.ரிபாயிஸின் மகனும், புத்தளம் எஸ்.ஈ.ஸி கல்வி நிலையத்தின் இயக்குநரும், புத்தளம் கல்வியியலாளர்களின் சங்கத்தின் செயலாளரும், புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினரும் , பிரபல அறிவிப்பாளரும், நாடறிந்த ஊக்குவிப்பு பேச்சாளரும் ஆவார் .

இவரது இந்த நியமனமானது புத்தளம் நகருக்கு கிடைக்கப்பெற்ற பெருமையாகும்.