திடீர் இடமாற்றங்கள்; கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை மாகாண ஆளுனர் பேராசிரியர். ஜயந்தலால் இரத்னசேகர மாற்றம் செய்துள்ளார். மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலராககடமையாற்றியஎம்.வை.பைசால் மாகாண முதலைமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.
மாகாண பொதுச் சேவைஆணைக்குழுவின் செயலாளராக ஜே.லியாகத் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாகாண விவசாய விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நஸீர் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமனம்செய்யப்பட்டு உள்ள அதேவேளை ஏற்கனவே மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜி.கோபால ரட்ணம் பேரவை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எச்.ஈ.எம்.டப்ளியூ.ஜி. திசாநாயக்கா விவசாய அமைச்சின் செயலராகநியமனம்செய்யப்பட்டுள்ளார். மாகாண ஆளுனரின் செயலாளராக கடமையாற்றிய எல் பி.மதன்னாயக்கா சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக கடமையாற்றிய எம்.சிவலிங்கம் அவரது நிரந்தர பதவியான மட்டு.மாநகர ஆணையாளராக கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சின் பதில் செயலாளராக கடமையாற்றிய என்.மணிவண்ணன் அவரது நிரந்தர பதவியான மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு அனுப்ப்பி வைக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சு, ஆளுனரின் செயலாளரின் நியமனங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.