இந்தியாவில் இருந்து வருகை தந்த பகவத்கீதையை உலகெலாம் எடுத்துச் செல்லும் கீதா அமிர்தானந்த ஜீயும் மற்றும் ஐந்து மாதாஜீக்களும் இன்று (6) வெள்ளிக்கிழமை காரைதீவுக்கு வருகை தந்திருந்தார்கள்.
இந்தியா திருநெல்வேலி மதுரை சாரதா ஆச்சிரம சன்னியாசிகளான சண்முக பிரியாம்பா, கதாதர பிரியாம்பா, நீலகண்ட பிரியாம்பா, சதாசிவ ப்ரியாம்பா, துர்கா பிரியாம்பா ஆகிய ஐந்து மாதாஜி களும் அவருடன் வந்திருந்தார்கள். மேலும் இந்தியா தமிழ்நாட்டுச் சேர்ந்த 20 கீதா அன்பர்களும் கலந்து கொண்டிருந்தார்கள் .
முன்னதாக காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இவர்களை வரவேற்று விசேட பூஜை இடம் பெற்றது .அதன் பின்பு அவர்களது ஒன்று கூடல் இடம் பெற்றது .
அங்கு ஆலய தர்மகத்தா இரா.குணசிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆலய தர்மகர்த்தா எஸ்.நமசிவாயம் உள்ளிட்ட ஏனைய ஆலய தலைவர்கள் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
பின்பு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மணிமண்டப வளாகத்துக்கு விஜயம் செய்தார்கள் .
அங்கு விசேட பூஜையும் தொடர்ந்து மணிமண்டபத்திலே ஒன்று கூடலும் பணி மன்ற ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கீதா அமிர்தானந்த ஜி மற்றும் நீலகண்ட பிரியாம்பா ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள் .
அவர்களுக்கு சுவாமி விபுலானந்தரின் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது .
பணி மன்ற செயலாளர் கு. ஜெயராஜி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலப்பணிப்பாளர் கண இராசரெத்தினம் ( கண்ணன்) இந்து ஸ்வயம் சேவக சங்க பிரதிநிதி வரதன் ஜீ ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
( வி.ரி.சகாதேவராஜா)