இலுப்பைக்குளம் கண்டம் வயல் பிரதேசத்திற்குச் செல்லும் வீதி பெரும் உடைப்பெடுத்துள்ளமையினால் விவசாய நிலங்கள் பாதிப்பு!

அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் நாவிதன்வெளி பிரதேசசெயலகப்பிரிவில் சவளக்கடை கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு உட்பட்ட சிறிமுருகன் விவசாய அமைப்பின் இலுப்பைக்குளம் கண்டம் வயல் பிரதேசத்திற்குச் செல்லும் வீதி பெரும் உடைப்பெடுத்துள்ளமையினால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதுடன் அதனூடன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது எனவே அவ்வீதியினைச் செப்பநிட்டுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கடும் மழையின் காரணமாக இவ் வீதி உடைபெடுத்துள்ளதாகவும் சுமார் 6 மீற்றர் நீளமும் 5 மீற்றர் ஆழத்திலும் உடைப்பெடுத்து இருப்பதுடன் அப்பகுதியூடான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்சமுடியாத நிலையும் ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்
அவ்வீதியின் ஊடாக வயல் நிலங்களுக்கு உழவு இயந்திரம் மற்றும் வாகனங்கள் ஊடக எந்தப் பொருட்களையும் ஏற்றிச்செல்லமுடியாமல் போக்குவரத்துத் தடைப்பட்டு இருப்பதனால் விவசாயிகளின் நலன் கருதி அவ்வீதியினைச் செப்பநிட்டுத்தவதுடன் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நட்ட ஈட்டினையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்