சுற்று சூழலை பாதுகாக்க பாடசாலை மட்டங்களிலிருந்து கற்பிக்க வேண்டும்

பிளாஸ்ரிக் பொருட்களை மற்றும் கழிவகளை கண்ட கண்ட இடங்களில் வீசி எறியாது அவற்றை உரிய இடத்தில் போடுவதை பாடசாலை மட்டங்களில் இருந்து பழக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

யுஎன்டீபி நிறுவனத்தால் மன்னாரில் முன்னெடுக்கப்படும் சுற்றுசூழல் தொடர்பான அபிவிருத்துp திட்டங்கள் மீளாய்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் செவ்வாய் கிழமை (03) நடைபெற்றபோதே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

யுஎன்டிபி அமைப்பானது மன்னார் மாவட்டத்தில் ஆறு குழுக்களுக்கு நிதி வழங்கி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

சூழல் நேயத்தை முன்னிருத்தி இவ் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. சூழல் மாசடையாது அதாவது உச்சக்கட்டதிற்கு செல்லாதிருக்கும் நோக்கம் கொண்டு இத்திட்டம் நடைபெறுகிறது;

நாங்கள் முன்னெடுத்து செல்லுகின்ற எந்த அபிவிருத்தி திட்டமும் சூழலோடு சேர்ந்த திட்டமாக அமைய வேண்டும். அப்பொழுதுதான் இவை நிலைத்திருக்கும்.

சூழலுக்கு பொருத்தமான திட்டங்களை பிரதேச செயலாளர்களுடன் பங்குத்தாரர்கள் இணைந்து செயல்படும்போதுதான் இவைகள் சிறப்பாக அமையும்.

இங்கு முன்னெடுக்கப் படுகின்ற திட்டங்களை நோக்கும்போது மிகவும் பிரயோசனமானதாக இருக்கின்றது. ஆகவே அணைத்து பங்குத்தாரர்கள் யாவரும் உங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இங்கு பங்குத்hரர்கள் கொண்டு நடைமுறைப்டுத்தும் இவைகள் ஓர் சிறந்த திட்டங்களாக காணப்படுவதால் இதில் அக்கறைக் கொண்டுள்ள திணைக்களங்கள் இதில் தொடர்ந்து அக்கறைக் கொண்டு செயல்பட வேண்டும.

இன்று ((03) இது முதலாவது மீளாய்வு கூட்டமாக அமைவதால் இனி அடுத்துவரும் கூட்டங்களில் மேலும் பரீட்சித்து முன்னெடுப்புக்களை முன்னெடுக்கலாம்.

பிளாஸ்ரிக் பொருட்களை மற்றும் கழிவகளை கண்ட கண்ட இடங்களில் வீசி எறியாது அவற்றை உரிய இடத்தில் போடுவதை பாடசாலை மட்டங்களில் இருந்து பழக்கப்பட வேண்டும்.

இவ்வாறு குப்பைகள் மற்றும் பிளாஸ்ரிக் கொருட்களை உரிய இடங்களில் போடுவதற்கு பொது மக்களும் கையாளுவதற்கு மனம்மாற்றம் அடைய வேண்டும்.

நகர சபை மற்றும் பிரதேச சபைகள் இவற்றை நடைமுறைப் படுத்துகின்றபோதும் இவைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

பிரதேச சபைகள் மற்றும் நகர சபை , உள்ளுராட்சி உதவி ஆணையாளர் யாவரும் இதில் கலந்து கொள்வதால் மன்னார் மாவட்டத்தை சுற்று சூழல் , பச்சையம் கொண்ட மாவட்டமாக வைத்திருக்க முடியும். என இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)