யுஎன்டீபி நிறுவன உதவியல் நடைபெறும் திட்டங்கள் மீளாய்வு

-மன்னார் மாவட்டம் சூழலை விட்டு வெளியேறும்போது இதனால் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடாது என்ற நோக்கில் யுஎன்டீபி அமைப்பு மன்னார் மாவட்டத்தில் அறு அமைப்பகள் ஊடாக முன்னெடுத்து வரும் திட்டங்களை மீளாய்வு செய்த நிகழ்வு இடம்பெற்றது.

அதாவது யுஎன்டிபி மன்னார் மாவட்டத்தில் ஆறு குழுக்களுக்கு நிதி வழங்கியிருந்தது. இந்த நிதியானது மாற்றாற்றால் கொண்ட அடம்பனிலுள்ள ‘வீ கேன்’ அமைப்புக்கு 15 மில்லியன் ரூபாவும் , இதைவிட நிதி குறைவாக மன்னாரில் மார் நிறுவனம் மன்னாரிலும் பாப்பாமோட்டை பகுதியிலும் , பேசாலை முருகன் கோவில் பகுதியில் பனம் தும்பு உற்பத்திக்கும் . தலைமன்னாரில் பனம் விதை நாட்டுவதும் கருவாடு பதனிடும் திட்டங்களுக்கும் , ‘எச்டீஓ’ நிறுவனம முசலி பகுதியில் குளம் அமைக்கும் திட்டத்திற்கும் மற்றும் இரு நிறுவனங்கள் பாப்பாமோட்டை பகுதிகளில் கண்டல் தாவரங்கள் நடும் திட்டத்துக்கும் நிதி உதவிகள் செய்துள்ளன.

இவர்களுடன் வன இலாகா , பிரதேச செயலகங்கள் . கரையோர பாதுகாப்பு திணைக்களம் . கைத்தொழில் சமாஜம் இவ்வாறு 25 அரச திணைக்கங்கள் இத்திட்ட்ஙகளுக்கு உதவியாக இருந்து வருகின்றன.

இத்திட்டங்களுக்கான மீளாய்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் செவ்வாய் கிழமை (03) நடைபெற்றது. இந்த மீளாய்வு காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணி வரை இடம்பெற்றது.

இவ் மீளாய்வு கூட்டத்தில் ஆறு பங்காளி அமைப்புக்களும் இவர்களுடன் செயற்படும் திணைக்கள அதிகாரிகளுமாக 35 பேர் பங்குபற்றியிருந்தனர்.

(வாஸ் கூஞ்ஞ)