பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுடன் கலந்துரையாடல் 

 

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்புஅமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுடன் அவற்றின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் அமைச்சு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது.

 

தேசிய பொருளாதாரத்திற்கு மேலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கு இந்த நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துதல், திறமையான பொது சேவையின் மூலம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் போன்ற விடயங்களை நிவர்த்தி செய்தல் ஆகியவை கலந்துரையாடலின் மையமாக இருந்தது.

 

இக்கலந்துரையாடலி அமைச்சர் K. V சமந்த விதயாரத்ன ,  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் கௌரவ திரு.சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் மற்றும்தென்னை பயிர்ச்செய்கை சபை, தென்னை அபிவிருத்தி அதிகார சபை, தென்னை ஆராய்ச்சி மையம்,கப்ருகா நிதி, பனை அபிவிருத்தி சபை,கித்துள் அபிவிருத்திச் சபை, இலங்கை முந்திரி கூட்டுத்தாபனம், மசாலா மற்றும் அது சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் வாரியம் ஆகிய நிறுவனங்களின்  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.