அஸ்வெகம நலன்புரி கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு அரசு விடுத்திருக்கும் அறிவுறுத்தலைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகம்; மன்னார் மக்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்.
அஸ்வெகம திட்டத்துக்குப் புதிதாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும் ஏற்கனவே விண்ணப்பித்து கிடைக்காத பயனாளிகள் மேன்;முறையீடு செய்வதற்கும் மற்றும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் மேலும் தெரிவித்திருப்பதாவது முதலாம் கட்டமாக எண்ணீடுகளில் பதிவு செய்யப்பட்டு கியூஆர் இனைப் பெற்றுக்கொண்ட போதும் கொடுப்பனவுகளினை பெற்றுக் கொள்ளாத பயனாளிகள் தங்களது மேன்முறையீடுகளை 2024.12.15ந் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ளவும் எனவும்
புதிதாக விண்ணபிக்கின்ற பயனாளிகள் தங்களது மேன்முறையீடுகளை 2024.12.09ந் திகதி வரை பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வாஸ் கூஞ்ஞ)