கல்முனை பிரதேச செயலாளராக(பதில்)பி.டி.எம் இர்பான் நியமனம்.”

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை பதில் பிரதேச செயலாளராக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றும் பி.டி.எம் இர்பான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஜே.லியாக்கத் அலி நாளையுடன் பதவி உயர்வு பெற்று கிழக்கு மாகாண சபைக்கு செல்லவிருப்பதனால் அவரின் இடத்திற்கு பதில் பிரதேச செயலாளராக பி.டி.எம் இர்பானினை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம நியமித்துள்ளார்.

புதிய பிரதேச செயலாளர் பி.டி.எம் இர்பான் எதிர்வரும் புதன்கிழமை(04) தனது கடமைகளை பொறுப்பேற்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.