பிரதியமைச்சர்அருண் ஹேமசந்திரா
(வேதாந்தி)
தேசிய மக்கள் சக்தி மாகாணசபை முறைமையை நீக்குவதற்கான எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதற்கான மக்கள் ஆணையை நாம் பெறவில்லையென வெளிவிவகாரபிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற அருண் ஹேமசந்திரா தெரிவித்தார்.
பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைருமான அருண் ஹேமசந்திரா அவர்களது தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஐஸ்டினா முரளிதரன் அவர்களது ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற அனர்த்த முகாமைத்து குழு கூட்டத்திற்குபின் ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும்போதே இவ்வாறு தெரிலித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருது்து தெரிவிக்கையில் தற்போதுள்ள மாகாணசபை அதிகாரம் போதியது அல்ல நிச்சயமாக நாம் இதனையும் தாண்டிய தீர்வை நோக்கி செல்லவேண்டும். புதிய யாப்பு நடைமுறைக்கு வரும் போது முதலாவது சீர்திருத்தம் தொடக்கம் 20வது சீர்திருத்தம் அனைத்தும் மாற்றப்பட்டு புதிய அரசியல் அமைப்புத்தான் முன்வைக்கப்படவுள்ளது.
மாகாணசபையைவிட திறமையான அனைத்து மக்களுக்கும் சம உரிமையை வலியுறத்தக்குடிய அரசியல் அமைப்பு எமக்குத்தேவை அதில் மாகாணசபை இருக்கா இல்லையா என்பது வேறு ஆனால் நாம் இதுவரையில் மாகாணசபையை நீக்குவதற்கான எந்தவொரு முன்மொழிவுகளையும் நாம் முன்வைக்கவில்லை. அது மாத்திரமல்ல எமக்கு கிடைத்த மக்கள் ஆணை மாகாணசபை முறைமையினை நீக்குவதற்கான மக்கள் ஆணை இல்லயென்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்
இதேவேளை இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டத்தில் மணல் அகழ்விற்கு தற்காலிகத் தடைவிதிப்பதாகவும் குறிப்பாக செங்கலடி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் அதிகமானோர் ஈடுபடுவதனால் வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, தற்காலிகமாக குறித்த பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரினால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன், விவசாய பாதிப்பிற்கான நஸ்ட ஈடு வழங்குதல், போக்குவரத்து, கல்வி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழுவதற்கு தேவையான ஏனைய விடையங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறித்தஅனர்த்த முகாமைத்து குழு கூட்டத்திற்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழா, முஹம்மட் சாலி நளீம் ஆகியோர் கலந்து கொண்டு மட்டு மாலட்டத்தில் மக்கள் அதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர்.