அம்பாரை மாவட்டத்தில் இராணுவத்தினரின் ஏற்பட்டில் வெள்ள அனர்த்தம் இடம்பெற்ற இடங்களுக்கு சென்று மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் சிற்றுண்டி உணவுகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக அக்கரைப்பற்று இராணுவ முகாமின் 241ஆம் படைப்பரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் டானிக பத்திரரெட்ணவின் முயற்;சியின் பயனாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகத்தின் மைதானத்தில் வைத்து ஆயிரம் பேருக்கு தயார் செய்யப்பட்ட மாஹி நூடுல்ஸ் மற்றும் நெஸ்டோமோல்ட் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.
மாஹி நூடுல்ஸ் மற்றும் நெஸ்டோமோல் நிறுவனங்களின் உதவியுடன் மேஜர் ஜானக சுபசிங்கவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நூடுல்ஸ் மற்றும் நெஸ்டோமோல்ட் சிற்றுண்டி உணவுகள் வழங்கும் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது பெருந்திரளான மக்கள் மைதானத்திற்கு வருகை தந்து நூடுல்ஸ் மற்றும் நெஸ்டோமோல் ஆகியவற்றை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு சுவைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.