இன்று (1.12.2024) கெளரவ.இரா.சாணக்கியன் பா.உ அவர்களினால் போரதீவுபற்று , வெல்லாவெளி பாலத்திற்கு கீழ்பகுதியில் பல காலமாக தேங்கி நின்ற ஆற்றுவாழையை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவற்றை வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததினை நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன் பாரியமழை வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட பல வீதிகளை நேரில் சென்றும் பார்வையிட்டார். மக்கள் மிகுந்த சிரமத்துடன் மத்தியில் தமது போக்குவரத்தினை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான பாவனைக்கு உதவாத வீதிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு உடனடியாக மக்கள் பாவனைக்கு விடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்