தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் பிரதி அமைச்சருமான ரி.ஜி.ரத்னகமகே திருக்கோவில் பிரதேசத்திற்கு நேற்று (01) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கள விஜயத்தின்போது விநாயகபுரம் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களுக்கு சென்ற அவர் மீனவர்களை சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
இதன்போது வெள்ள அனர்த்தத்தில் சேதமடைந்த மீனவர்கள் இயந்திர படகுகளின் சேதம் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
அத்தோடு மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் அறிந்து கொண்டார்.
இதன் பின்னராக மீனவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வினை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார்.
இதேநேரம் விநாயகபுரம் மீனவர்களினால் மகஜர் ஒன்றும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் விஜயத்தின்போது தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட இணைப்பாளர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.