மட்டக்களப்பில் சேதமடைந்துள்ள மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்துள்ள மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் இன்று (30) பார்வையிட்டார்.

நாட்டின் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் சுமார் 155 வருடம் பழமை வாய்ந்த கட்டிடமான மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களம் சேதமடைந்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார் .

சேதம் அடைந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்பான செய்யப்பட்ட முறைப்பாட்டுடன் மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்திற்கான புதிய அலுவலக கட்டிடம் ஒன்றிணையும் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சேதமடைந்துள்ள குறித்த கட்டிடத் தொகுதியை பார்வையிட்டதுடன் மாவட்ட வளிமண்டல திணைக்களத்திற்கான புதிய அலுவலக கட்டிடம் ஒன்றினை வழங்குவதற்கான ஆவணம் செய்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ் களவிஜயத்தின் போது வளிமண்டலவியல் திணைக்கள நிலைய பொறுப்பதிகாரி எம். எ எம் சாதீக், ஓய்வு நிலை முன்னாள் சிரேஸ்ட வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி கணபதிப்பிள்ளை சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டதான் பாதிப்பு தொடர்பான விளக்கங்கள் இதன் போது விளக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.