விஷேட வைத்திய நிபுணரும் மருத்துவ நிர்வாகம் கொண்டவருமான வைத்திய கலாநிதி தர்மராஜன் வினோதன் அவர்கள் மன்னார் பிராந்திய சகாதார சேவைகள் பணிப்பாளராக மீண்டும் மன்னாருக்கு நியமனம் பெறுகின்றார்.
இவர் திங்கள் கிழமை (02.12.2024) முதல் தனது பதவியை பொறுப்பேற்கின்றார். இவர் 2019 டிசம்பர் 26ந் திகதியிலிருந்து 2024 ஏப்பிரல் 16ந் திகதி வரை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய பின் கிளிநொச்சிக்கு மாற்றலாகி சென்றிருந்தார்.
இந்த நிலையிலே இவர் மீண்டும் மன்னாருக்கு மாற்றலாகி வருகின்றார். கொரோனா காலத்தில் நாடு பூராகவும் கொரோனா பாதிப்புக்கள் இடம்பெற்றபோதும் மன்னாரில் இதிலிருந்து மன்னார் மக்களை மீட்nடுப்பதில் தீவிரமாக சரியான திட்டமிடலுடன் செயற்பட்டமையால் அந்நேரம் உயிர் சேதம்மின்றி மக்களை காப்பாற்றியமையால் இவர் அந்நேரம் பலராலும் பாராட்டு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைகாலமாக மன்னார் பொது வைத்தியசாலைக்கும் பொது மக்களுக்கும் இடையில் நிலவி வரும் இடைவெளியை இவர் நீக்கி நல்லதொரு நிலைமையை உருவாக்குவார் என இங்கு பலராலும் எதிர்பாக்கப்படுகின்றது.
(வாஸ் கூஞ்ஞ)