மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாகவும் மன்னார் மாவட்டம் வெள்ளநீரால் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியதையிட்டு ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது..
குறித்த கூட்டமானது வியாழக்கிழமை (28) காலை கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
இதன்போதுஇ மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை பாதிப்புக்கள் தொடர்பாகவும்இ பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியூதீன்இ காதர்மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன் , ம.ஜெகதீஸ்வரன் , து.ரவிகரன் , செ.திலகநாதன் , ப.சத்தியலிங்கம் மற்றும் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் , பிரதேச செயலாளர்கள் ,அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் ,வலயக் கல்விப்பணிப்பாளர்கள் , பொலிஸார் , இராணுவத் தரப்பு உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.