போராடும் உரிமை மதிக்கப்படவேண்டும்இ அகப்புறச் சூழல் சமநிலை குலையாது பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை இசமூகப்பொறுப்புள்ள அனைவரதும் விருப்பமாகும். சமூக ஊடகங்களின் காட்சிகளும் இ செவிவழிச் செய்தி பரவுகையும் மன்னார் வைத்தியசாலையில் தாய் சேய் மரணம் மேலும் பரபரப்பையும் இ பதட்டத்தையும் அதிகரிக்கச் செய்துவிட்டனஇ மருத்துவம் மற்றும் இமருத்துவம் தொடர்பான பட்டப்படிப்பினை இ கற்கைநெறியினை பூர்த்திசெய்து வெளியேறும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சேவையாளர்கள் மாவட்டத்தில் சேவையாற்ற முன்வரவேண்டும்இ இதனை எமது சமூகம் ஊக்குவிக்க வேண்டும் என மன்னார் நலன்புரிச்சங்கம் (ஐக்கிய இராட்சியம்) சார்பாக இதன் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் கடந்த செவ்வாய்க்கிழமை 19ஃ11ஃ2024 அன்றுஇ மாவட்ட பொது மருத்துவமனையில்இ இடம்பெற்ற தாய்-சேய் இறப்பு தொடர்பானஇ இந்த துன்பியல் சம்பவத்தையிட்டுஇ மன்னார் நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா) ஆகிய நாம்இ இழப்பின் பரிதவிப்பில் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த துக்கத்தினையும்இ ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடுஇ
மருத்துவமனையின் அமைதியான இ பாதுகாப்பான அக்கறை மிகுந்த செயற்பாட்டிற்கும் கரிசனை செலுத்துகிறோம்.
இத்துன்பியல் சம்பவத்திற்கான உண்மையான காரணங்களை அறிவதிலும் இமேற்கொண்டு ஒரு நலன்புரி சங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இ கரிசனைகள் தொடர்பாகவும்இ உரியதரப்பினருடன் உரையாடிவருகிறோம்.
செவிவழிச் செய்திகள் ஊடாகவும் பலதரப்பட்ட சமூக ஊடக காட்சிகள் மூலமாகவும் இ உணர்ச்சி வசப்பட்ட கையாளுகையினை மேற்கொள்ளுவதைத் தவிர்த்துஇ நிதானமாகவும் இ பொறுப்புடனும் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இ உரிய கவனத்தை ஏற்படுத்தி வருகிறோம்.
அனுதாபத்தின் அடிப்படையிலும் இ சமூகக்காட்சி ஊடகச் செய்திகள் இ செவிவழிச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு இஅவசர அவசரமாக அறிக்கை விடுதல் ஒரு தொண்டு நிறுவனமாகிய எமக்கு சவாலான விடயமே.
மன்னார் மாவட்ட மருத்துவ மனையின் இமகப்பேற்றுப் பிரிவின் புத்தாக்கத்திற்கும் இ மறுசீரமைப்பிற்கும் இ அதன் அபிவிருத்தி இ பராமரிப்புப் போன்ற விடயங்களில் கடந்த நான்கு வருடங்களாக இ மிகுந்த அக்கறையுடன் கூடிய இ பொறுப்புமிக்க ஓர் தொண்டு நிறுவனம் என்ற அடிப்படையிலும் இ மண்ணின் மைந்தர்கள் என்ற கரிசைனையுடனும் செயலாற்றி வரும் எமக்குஇ மேற்படி துயரச்சம்பவம் பேரதிர்ச்சியையும் இ வேதனையையும் தருகிறது.
அரச நிருவாகத்தினால் கைவிடப்பட்ட மன்னார் மருத்துவமனையின் மகப்பேற்று பிரிவினை எமது மக்கள் மீது கொண்ட அதீத அக்கறையினால் சர்வதேச தரத்திற்கு கொண்டுவர புலம்பெயர் மக்கள் அமைப்பாக நின்று கடினமாக உழைத்து பணி முடித்து இவ்வாண்டு பெப்ரவரியில் கையளித்தோம்.
நாளாந்தம் ஆறு இ ஏழு குழந்தைகள் வீதம் வருடம் சுமார் 1800 ஃ2000 வரையிலான குழந்தைகள் உயிர் அச்சமின்றி பிறக்கின்றனர்இ இருந்தபோதும் ஒரிரு மரணங்கள் துரதிஷ்ட வசமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இறப்பின் தாங்கமுடியாத வலியும் இஅழுகையும் இகோபமும் இ ஆத்திரமும் சேர்ந்து இயல்பான சூழ்நிலையை கொந்தளிப்புக்கு உள்ளாக்கி விடுகின்றன.
உயிர்கள் பெறுமதிமிக்கவைஇ கோபம் நியாயமானது இநீதி கேட்டு போராடுவது வரவேற்கக்கூடியது. கோபத்தை வெளிப்படுத்தும் முறையானது இ இன்னும்அதே மகப்பேற்று விடுதியில் குழந்தை பெற காத்திருக்கும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மாரின் மன அமைதியை குலைத்துவிடக்கூடாது என்பதிலும்இ மருத்துவ பணியாளர்கள் இ நோயாளிகளின் நலன்களிலும் கவனம் செலுத்துவதாக அமைந்திருப்பது என்பது ஆத்திரம் தவிர்த்த அறிவான அணுகுமுறையாக அமையும்.
உணர்ச்சியூட்டி இ கோபமூட்டி இ ஆர்ப்பரித்து மருத்துவமனை சுற்றாடல் போர்க்களமாகவே மாற்றப்பட்டுவிட்டது. போராடும் உரிமை மதிக்கப்படவேண்டும்இ அகப்புறச் சூழல் சமநிலை குலையாது பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை இசமூகப்பொறுப்புள்ள அனைவரதும் விருப்பமாகும்.
சமூக ஊடகங்களின் காட்சிகளும் இ செவிவழிச் செய்தி பரவுகையும் மேலும் பரபரப்பையும் இ பதட்டத்தையும் அதிகரிக்கச் செய்துவிட்டனஇ
மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசஅதிபர் தலைமையில்இ வைத்தியசாலை பணிப்பாளர் இ மாகாண செயலர் இ பொது அமைப்பு இ மத அமைப்பு பிரதிநிதிகள் உடனடி கலந்தாய்வினை மேற்கொண்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் விஷேட குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. உடற்கூறு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன இ இந்த அடிப்படையில் இவிசாரணையின் பின் பெறப்படுகின்ற சாட்சியங்கள் இ ஆதாரங்கள் சட்டத்தின்முன் சமர்ப்பிக்கப்படும் இ
அதன்பின்னர் வழங்கப்படும் நீதியான தீர்ப்பானது பாதிகப்பட்ட குடும்பத்தினர் உட்பட்ட அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என எதிர்பார்கின்றோம்.
இத்தகைய பின்னணியில்இ எமது மன்னார் நலன்புரிச்சங்கம் (யுகே) இற்கும் மன்னார் மாவட்ட பொது மருத்துவ மனைக்கும்இஇவடமாகாண சுகாதார அமைச்சிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் (எம்ஓயு) அடிப்படையில் வரையறைக்கு உட்பட்டவகையில்இ நிருவாக வரைமுறை மீறாத வகையில் எமது கேள்விகளையோ இகரிசனைகளையோ வெளிப்படுத்தும் உரித்து உண்டு என்ற வகையில் நாம் எமது வேண்டுகையினை முன்வைத்துள்ளோம்.
மேலும் இதனூடாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் இ அரச இ திணைக்கள தலைவர்கள் இ மதத்தலைவர்கள் இ நலன் விரும்பிகள் அனைவரும் சமூக அக்கறையோடும்இ சமூக விழிப்போடும் இஇடைவிடாது தொடர்ந்து செயற்படும் போது இ எமது மக்களுக்கு ஏராளமான நன்மைகளையும் இ இலகுவான சேவைகளையும் இ வழங்க முடியும்.
மருத்துவம் மற்றும் இமருத்துவம் தொடர்பான பட்டப்படிப்பினை இ கற்கைநெறியினை பூர்த்திசெய்து வெளியேறும் எமது மாவட்டத்தைச் சேர்ந்த சேவையாளர்கள் மாவட்டத்தில் சேவையாற்ற முன்வரவேண்டும்இ இதனை எமது சமூகம் ஊக்குவிக்க வேண்டும்இ
புலம்பெயர் சமூகமாகஇ மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராட்சிய கிளையினராகிய நாம் பணிவன்புடன் வேண்டி நிற்கிறோம். மன்னார் நலன்புரிச்சங்கம் (ஐக்கிய இராட்சியம்) சார்பாக இதன் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
(வாஸ் கூஞ்ஞ)