காரைதீவில் நடைபெற்ற சுவாமி நடராஜானந்தா ஜீ மஹராஜின் 121வது ஜனனதின வைபவம்

சேவையின் சின்னமாம் இராமகிருஸ்ணமிசன் துறவி சுவாமி நடராஜானந்தா ஜீ மஹராஜின் 121வது ஜனனதின வைபவம் இன்று (29.11.2024) வெள்ளிக்கிழமை காலை எளிமையாக நடைபெற்றது.

அவர் பிறந்த காரைதீவு மண்ணில் அடிகளாரது திருவுருவச்சிலைக்கு முன்னால் இந்துசமயவிருத்திச்சங்கத்தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் இன்று காலை நடாத்தியது.

முதலில் பகவான் ஸ்ரீ இராமகிருஸ்பரமஹம்சரின் வேதபாராயணத்தைத்தொடர்ந்து சுவாமியின் திருவுருவுச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தலும் புஸ்பாஞ்சலியும்இடம்பெற்று தொடர்ந்து சங்கச்செயலாளர் கு.ஜெயராஜியினால் மங்களாரதி காட்டப்பட்து.

பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் , சிறப்பு அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

சிறப்புரையை சுவாமி நடராஜானந்தா நூற்றாண்டுவிழாச் சபையின் செயலாளர் விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.

ஆலய தலைவர்கள் சுவாமியின் அபிமானிகள் மாணவர்கள் உறவுக்காரர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
IMG-20241129-WA0009.jpg