திருகோணமலை மாவட்ட கள்ளம்பற்றை திரியாய், குச்சவெளி, பெரியகுளம், பாலம் போட்டாரு, பத்தினி புரம், தம்பலகாமம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட மக்கள் தங்கி இருக்கும் தற்காலிக முகாம்களை பார்வையிட்டு அங்கிருக்கும் தேவைகளை கேட்டறிந்து பணிகளை துரிதப் படுத்தினார்.
திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன். தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இடைத் தங்கல் முகாம்களில் தங்கி வருகின்றனர். வெள்ள நீரை வடிந்தோட செய்வதற்கான நடவடிக்கைகளும் இடம் பெற்று வருகின்றன.