மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக 19,900 குடும்பங்களைச் சேர்ந்த 49,123 பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இவர்களில் 2558 குடும்பங்களை சேர்ந்த 7241 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 56 பாதுகாப்பு நிலையங்களிலே அமர்த்தப்பட்டுள்ளன. அத்துடன், உறவினர் வீடுகளில் 11,890 குடும்பங்களை சேர்ந்த 30, 541 பேர் இடம் பெயர்ந்து உள்ளனர்.
அது மட்டும் இல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இவர்களுக்காக இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய பிரிவினர் எங்களுக்கு பெரிதும் உதவி செய்து வருகிறார்கள்.
தூர இடங்களில் சிக்கிய மக்களை அவர்கள் பாதுகாப்பாக அவர்களுடைய இருப்பிடங்களுக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.
தற்போது வாழைச்சேனை பிரதேசத்தில் மீன் பிடிக்க சென்ற மூன்று நபர்களை மீட்க வேண்டியதாகக் கோரப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து தற்போது செயற்படுகிறார்கள்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர் வீடுகளில் தங்கி உள்ளனர், சொந்த வீடுகளில் உள்ளவர்கள், முகாம்களில் தங்கியுள்ள மக்கள் என மூன்று வகையானவர்கள் காணப்படுகிறார்கள்.
நேற்று (27) அவசர அனர்த்த முகாமைத்துவ கூட்டம் கூட்டப்பட்டு, இது தொடர்பாக ஆராயப்பட்டு, சரியான முறையில் சகலருக்கும் அந்த நிவாரணம் கிடைக்க வேண்டும் என மேலதிக அரசாங்க அதிபரிடம் உணவு விநியோக நடவடிக்கைகளுக்கான பொறுப்பு வழங்கப்பட்டது.
ஏனெனில், முகாம்களில் உள்ள மக்களுக்கு, மூன்று நாட்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக சமைத்த உணவுகளை மூன்று நேரமும் வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு கிராம சேவகர்கள் ஊடாக சமைத்த உணவுகளை அவசியமான போது வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவு தவிர்ந்த ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆயத்தமாக இருக்கின்றன.
அதற்காக மேலதிக அரசாங்க அதிபரரை தொடர்பு கொள்வதன் ஊடாக கிராம சேவகர்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் என அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.