கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பொண்டுகள்சேனை, குடும்பிமலை, பிரம்படித்தீவு மற்றும் அதனை அண்டிய பிரதேசத்திற்கு சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களின் பாதுகாப்பிற்காக பயன்பாட்டில் காணப்பட்ட படகு இயந்திரம் பழுதடைந்து காப்பட்டது.
அந்த வகையில் மக்களின் போக்குவரத்து வசதிகள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டிருந்தன. அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் தேசிய மக்கள் சக்தியின்
வங்கி மற்றும் நிதிமன்றத்தின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் க.திலிப்குமார் உரிய இடத்திற்கு சென்று
அரசாங்க அதிகாரிகளின் உதவிகளுடன் உடனடியாக போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி மன்றத்தின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் க.திலிப்குமாரின் பணிப்பின்பேரில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்து இடைத்தங்கல் முகாம்களுக்கு கொண்டு செல்லும் ஆதரவாளர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உட்பட அத்தியாவசிய உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.