மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களது தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலின் போகு மாவட்ட அரசாங்க அதிபர் இந்த அனர்த்தத்தில் சிக்குண்டு பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக உடன் செயற்படுமாறு அரச திணைக்களங்களி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இக்கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் சியாத் உள்ளிட்ட மாவட்ட செயலக மற்றும் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், முப்படையின் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிகள் என பலரும் கலந்து கொண்டு தம்மால் இந்த அனர்த்த நிலையில் மக்களுக்காக ஆற்றக்கூடிய அனைத்து சேவைகளையும் அரசு அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்த அனர்த்த வேளையில் முப்படையினரின் சேவை மிக அளப்பரியது என்றும் அவர்கள் மாவட்டத்தில் திறம்பட தமது உதவிகளை மேற்கொண்டு வருவதாக இதன் போது அரசாங்க அதிபர் மாவட்டம் சார்பாக அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.