வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு சீரற்ற காலநிலை தொடர்பில் தெரிவிக்க அல்லது உதவிகளை பெறுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
107 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.