விவசாயம் உணவு தொழில்நுட்பம் பாதுகாப்பு மற்றும் புதுமை ஆகியவற்றில் சுவிஸ்ட்ஸர்லாந்து தொழில்நுட்பத்தை தமிழகத்துடன் இணைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களுடன் தமிழ்நாடு உணவு வேளாண்மைத்துறை அமைச்சர் ரங்கசாமி சக்கரபாணி தலைமையிலான குழுவினர் அண்மையில் சுவிஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
சுவிஸ்நாட்டுக்கு வருகைதந்த குழுவினரை உலக ஆன்மிக கட்டமைப்பு இணைப்பாளர் வேலுப்பிள்ளை கணேசகுமார் தலைமையிலான குழுவினர் சூரிச் விமான நிலையத்திவ் வைத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
அமைச்சருடன் இந்திய நிருவாகசேவை உத்தியோகத்தர்களான மோகன் தர்மராஜன் , அண்ணாத்துரை ஆறுமுகம், பாரத் மனோகரன், தேவானந் நெருஞ்சிப்பெட்டை கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நான்கு நாட்கள் சுவிஸ்நாட்டில் தங்கிருந்த அமைச்சர் தலைமையிலான குழுவினர் பல்வேறு வகையான உத்தியோகபூர்வ சந்திப்புக்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.