மட்டக்களப்பு பனிச்சையடி சர்வேதயா வீதியின் குறுக்காக மரம் ஒன்று சரிந்து விழுந்திருந்தது அதனை மாநகர ஆணையாளர் நடராசா சிவலிங்கம் அவர்களின் துரித முயற்சியால் அகற்றப்பட்டு பொது மக்களின் பாவனைக்கு வீதி சில மணிநேரத்தில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
மாநகர சபை எல்லைக்குள் வடிகான்களை துப்பரவு செய்து நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது அதிகமான இடங்களில் நீர் தேங்கிநிற்பதனால் மக்களின் குடியிருப்புகளில் அன்றாட நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தெடர் மழை காரனமாக மக்களின் நடமாட்டங்கள் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது இவ்மழைதொடருமாயின் மக்கள் கடுமையான பாதிப்புக்களை சந்திக்கவேண்டி வரும் என அச்சங்கொன்டுள்ளனர்
மக்கள் சற்று முன் ஆயித்தங்களோடு இருப்பது நல்லது தாழ் நிலப்பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட அனர்த்த மு முகாமைத்துவ பணிப்பாளர் குறிப்பிடுகின்றார்