மட்டக்களப்பில் குளங்களின் நீர் மட்டம் உயர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.

அதற்கிணங்க கட்டுமுறிவு குளத்தில் 12 அடி, உறுகாமம் குளத்தில் 17.9அடி , வெலிக்காக் கண்டிய குளத்தில் 17.11 அடி, நீர்மட்டம் அதிகரித்து வான்கதவு திறக்கப்பட்டு அவற்றிலிருந்து மேலதிக நீர் வெளியேறுகின்றது.

உன்னிச்சைக் குளத்தில் 30அடி,
வாகனேரி குளத்தில் 18.3அடி ,
மேலும் வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13. 6″அடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

புணானை அணைக்கட்டு 8.3″அடி, நவகிரிக் குளத்தின் 30.5 அடி, கித்துல் குளத்தின் 4 அடி நீர்மட்டம் உயர்த்துள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்வான பிரதேசங்களில் தேங்கியுள்ள மழைநீர் வழிந்தோட முடியாமையினால் பாதைகளில் நீர் தேங்கியுள்ளதுடன் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளதுடன் அவர்களின் அன்றாட நிலைமைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு