மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாகவும், மினி சூறாவளி காரணமாகவும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாகவும் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாகவும் வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்கேணி கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளும் சேதமடைத்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
அந்த வகையில் மாங்கேணி ஜீவனுள்ள கிறிஸ்தவ சபை தேவாலயம் மற்றும் கிராம மக்களின் வீடுகள் எட்டுக்கும் மேற்பட்டவை திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக சேதமடைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
தொடர் மழையினால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு காணப்படுவதை அவதானிக்க முடிவதுடன், சிலரது உடமைகளும் சேதமடைந்துள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.