அம்பாறை மாவட்டத்தில் பிரதான வீதிகளில் வெள்ளம்! போக்குவரத்து ஸ்தம்பிதம்!

அம்பாறை மாவட்டத்தின் பிரதான வீதிகள் பலவற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது . மேலும் வீதிக்கு குறுக்காக பாரிய மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்தை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளன.

இதனால் வழமையான போக்குவரத்துகள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது.

குறிப்பாக கல்முனையையும் நாவிதன்வெளி பிராந்தியத்தையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் உள்ள காரைதீவு மாவடிப்பள்ளி தாம்போதியும் வெள்ளத்தில் மூழ்கியது. அதேபோன்று மல்வத்தை வளத்தாப்பட்டி பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது.

இதனால் பெரிய வாகனங்களை தவிர ஏனைய வாகனங்கள் செல்ல முடியாது.
போக்குவரத்து ஸ்தம்பித்து இருக்கின்றது. அலுவலகங்கள் அரைகுறையாக இயங்கின. பெரும்பாலான அரச ஊழியர்கள் பணிக்கு சமூகமளித்திருக்கவில்லை.

சிரமத்தின் மத்தியில் உயர்தர பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நேற்றும் வானம் இருண்டு கனமழை தொடர்ந்து பொழிந்து கொண்டு
இருந்தது.
மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.