மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர அவர்கள் உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (25) இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக ஆளுனர் தெளிவு படுத்தினார்.
இதன் போது கருத்து தெரிவித்த ஆளுனர் இன மத பேதமின்றி நாம் இலங்கையர் எனும் அடிப்படையில் உழல் அற்ற தூய்மையான சேவையை மக்களுக்கு வழங் வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செயலாளர் எல்.பி மதநாயக்க, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள்,
பிரதேச செயலாளர்கள், திணைக்கல தலைவர்கள் , உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.