விசேட தேவையுடைய மாணவர்களுக்கு சக்கர நாற்காலிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (25) வழங்கப்பட்டது.
பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையமானது பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை நோக்காக கொண்டு பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
வடக்கு , கிழக்கு, மலையகம் பிரதேசங்களை சேர்ந்த விசேட தேவைக்குறிய மாணவர்களின் அன்றாட செயற்பாடுகளை இலகுபடுத்துவதன் மூலம் கற்ற செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு வைத்தியர்கள் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக இவ் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாரி அறக்கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் ச.நிகேஷ், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி. ச கோணேஸ்வரன் என பலர் கலந்து கொண்டவர்.