முன்பிள்ளைப் பருவ கணிப்பீடு தொடர்பான பயிற்றுவிப்பாளருக்கான பயிற்சி நெறி

மட்டக்களப்பில் முன்பிள்ளைப் பருவ கணிப்பீடு தொடர்பான பயிற்றுவிப்பாளருக்கான பயிற்சி நெறி இடம் பெற்றது.

A U லங்கா மற்றும் child fund ஆகிய நிறுவனங்களுடன் மாவட்ட செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பிரிவு இணைந்து ஏற்பாட்டில் மாவட்டத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி துறை சார்ந்த முன்பிள்ளைப் பருவ கணிப்பீடுகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களுக்கு துறை சார்ந்த வளவாளர்களை கொண்ட பயிற்சி நெறி இன்று மட்டக்களப்பு மன்ரேசா நிலையத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் , உதவி மாவட்ட. செயலாளர் ஜி. பிரணவன். முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் முரளிதரன்
A . U .லங்கா மற்றும் child fund ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் , மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்