மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தலுக்கு தயார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொக்கட்டிச்சோலை
மாவடிமுன்மாரி துயிலும் இல்லம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்காக தயாராகி வருகிறது.
கடந்த சில நாட்களாக அங்கு சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்போது மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்காக சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

நாளை மறுநாள் 27 ஆம் திகதி புதன்கிழமை அங்கு மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
(வி.ரி. சகாதேவராஜா)